மீண்டும் அரைசதம் விளாசினார் லபுக்ஷனே : டெஸ்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர்!!

15 January 2021, 10:37 am
wasington sundar - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல, தொடக்கம் சரியாக அமையவில்லை. வார்னர் (1), ஹாரிஸ் (5) ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர், லபுக்ஷனே மற்றும் ஸ்மித் மீண்டும் ஜோடி சேர்ந்த சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 90ஐ நெருங்கிய போது, ஸ்மித்தின் (36) விக்கெட்டை, தனது அறிமுக டெஸ்டில் கைப்பற்றி அசத்தினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். ஆனால், மறுபுறம் லபுக்ஷனே நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் வேட் பொறுப்பாக பங்களிப்பு கொடுத்து வருகிறார்.

தற்போது தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

Views: - 7

0

0