பண்ட் அதிரடி….இந்திய அணி சரவெடி..!!! பிரிஸ்பேனில் ஆஸி.,யின் 31 ஆண்டு கால சாதனை தகர்ப்பு

19 January 2021, 1:25 pm
brisbane test - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், பண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வென்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து, 35 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆஸ்திரேலியா அணி 294 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக, ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்களும், எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்டுக்களும், தாக்கூருக்கு 4 விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.

இதனால், 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. இருபுறமும் வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில், இந்திய அணி ஆரம்ப முதலே போட்டியை தன்பக்கமே வைத்துக் கொண்டது. தொடக்க வீரர் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி வெற்றியின் அருகில் சென்ற நிலையில், களத்தில் இருந்த பண்ட் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் செல்வாரா..? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்தது. கடைசி 8 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பண்ட்டும் கடைசி வரை களத்தில் இருந்து அதிரடி காட்டினார். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், முதல்முறையாக பிரிஸ்பேனில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், பிரிஸ்பேனில் 31 ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணிக்கு, இந்த தொடரில் எதிரணியினர் கொடுத்த இன்னல்களுக்கு இந்திய இளம்படையினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

Views: - 0

0

0