சூரியகுமாருக்கு அறிமுக வாய்ப்பு: தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி!

Author: Udhayakumar Raman
25 March 2021, 6:29 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூரியகுமாருக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது பங்கேற்கிறது. இதில் புனேவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-0 என முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து அணி தொடரை இழப்பதைத் தவிர்க்க நாளைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பது உறுதி.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததைத் தொடர்ந்து டி20 தொடரில் அசத்திய சூரியகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த லெவன் அணி கொண்டு களமிறங்குவது சமீப காலமாகவே பெரும் தலைவலியாக உள்ளது எனலாம். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கிட்டதட்ட மூன்று மாதங்கள் சர்வதேச போட்டிக்குத் திரும்பாத நிலையில், அக்சர் படேல் மற்றும் குர்னால் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் வருகையால் தலைவலியாக ஒன்றாகத்தான் உள்ளது.

இந்தாண்டு ரசிகர்களுக்கு ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் தான்: மீண்டும் இந்தியா-பாக் மோதல் ஆரம்பம்!

அதேபோல முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா சிறப்பாகச் செயல்பட்டதால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி உள்ளிட்ட சிறந்த இந்திய அணியின் வீரர்கள் மீண்டும் வரும் பட்சத்தில் அவர்களுக்கான இடமும் பெரும் நெருக்கடி ஆகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் திரும்பியவுடன் இது போன்ற இளம் வீரர்கள் ஓரங்கட்டப்படும் போது அவர்களின் நிலை என்ன என்பது பெரும் புதிராகவே தற்போது வரை உள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதகமான விஷயம் என்றால் அது துவக்க வீரர் ஷிகர் தவானின் மீண்டும் எழுச்சி பெற்று வந்துள்ளது தான். டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்த போதும் அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஒருநாள் போட்டியில் 98 ரன்கள் விளாசி அசத்தினார். இதன்மூலம் தனது துவக்க வீரர் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார் எனலாம். கடந்த போட்டியில் ரோகித் சர்மா காயம் அடைந்த காரணத்தினால் இந்த முறை அவருக்குப் பதிலாக சுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாம் ராகுல் டிராவிட் ஒருவரால் மட்டுமே சாத்தியம்: பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து வீரர்!!

ரோகித் சர்மாவின் காயம் பெரிய அளவில் இல்லாத போதும் அவருக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளித்து விட்டு, மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் போட்டியில் குல்தீப் யாதவ் மட்டுமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அவருக்குப் பதிலாக இந்த முறை சாஹல் வாய்ப்பு பெறலாம் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், பரசித் கிருஷ்ணா மற்றும் சார்துல் தாகூர் ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த முறை அவர்கள் கூட்டணி அப்படியே தொடரும் என்று தெரிகிறது. ஆனால் சார்துல் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவருக்குப் பதிலாக நடராஜன் அல்லது சிராஜ் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடர இழப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால் அந்த அணி கடுமையாக எழுச்சி பெற்று வர முயற்சிக்கும். இதைச் செய்ய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக எழுச்சி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் அந்த அணியின் பவுலர்களும் இந்திய பேட்ஸ்மேன்களை விரைவாக வெளியேற்ற போதுமான அளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை இந்த முறை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Views: - 117

0

0