ஆஷஸ் வெல்வதை விட இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவது ரொம்ப கஷ்டம்: சுவான்!

22 January 2021, 3:27 pm
swan - updatenews360
Quick Share

இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்துவது ஆஷஸ் தொடரை வெல்வது விட மிகவும் கடினமான விஷயம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியைப் பலரும் அந்த அணியை வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம். ஆஸ்திரேலியாவின் கோட்டை அது அதனால் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது சாத்தியமில்லாத ஒன்று என பல்வேறு விமர்சனங்கள் நிலவியது. அனைத்தையும் பொய்யாக்கிய இந்திய அணி 32 ஆண்டுகள் அசைக்க முடியாமல் இருந்து ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்தி, அந்த தொடரை வென்று அசத்தியது.

ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கிடையில் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான் இந்திய அணியை அதன் கோட்டையில் வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது ஆஷஸ் கோப்பை வெல்வதை விட மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அந்த இங்கிலாந்து அணியை எச்சரித்துள்ளார்.

india team - updatenews360

இந்தியா வரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் கேப்டன் கோலி இல்லாத நிலையிலும்கூட இந்திய அணி எழுச்சி பெற்ற திருப்பி அடித்தது மிகக் குறைந்த அணிகளால் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்றும் ஸ்வான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்வான் கூறுகையில், “இங்கிலாந்து எப்போதும் ஆஷஸ் கோப்பை வெல்லவே ஆசைப்படுகிறது. ஆனால் தற்போது உலக அளவில் மிகச் சிறந்த அணி ஆஸ்திரேலிய அணி அல்ல.

England 3rd test - updatenews360

ஒரு காலத்தில் அவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது அவர்கள் மைல் கணக்கில் தள்ளி உள்ளார்கள். அதனால் ஆஷஸ் தொடரில் இருந்து வேறு ஒரு சிறந்த அணிக்கு எதிரான தொடரைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதனால் இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்துவது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இங்கிலாந்து அணி உலக அளவில் சிறந்த அணியாகத் திகழ வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் விழுந்துவதிலிருந்து வெளியில் வந்து இந்தியா போன்ற தற்போது வலிமையாக உள்ள அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதேபோல இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் கை கொடுக்க வேண்டும். மேலும் பேட்ஸ்மேன்கள் கெவின் பீட்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன் போல விளையாட முயற்சிக்க வேண்டும். இந்திய மண்ணில் பீட்டர்சனின் பேட்டிங்கை இங்கிலாந்து வீரர்கள் ப்ளூ பிரிண்ட் எடுத்து தற்போது பயன்படுத்திக் கொண்டாலே அவர்களுக்குச் சாதகமானதாக அமையும்” என்றார்.

Views: - 0

0

0