ஒலிம்பிக் குத்துச்சண்டை: வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்…இந்தியாவுக்கு பதக்கம் உறுதி..!!

Author: Aarthi Sivakumar
30 July 2021, 10:13 am
Quick Share

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர்.

இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார். மீராபாய் சானு வென்ற வெயிட் லிப்டிங் வெள்ளிப்பதகக்த்துக்குப் பிறகு குத்துச் சண்டையிலும் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Views: - 296

2

0