மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்டோக்ஸ் : இந்திய தொடர்… முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

21 July 2021, 8:29 pm
Ben stokes - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இரடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை விளையாடச் சென்ற இந்திய அணி, அப்படியே இங்கிலாந்தில் தங்கி இந்தத் தொடரில் விளையாடுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் கரன், ஆலி ராபின்சன் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்பியதால், இங்கிலாந்து அணி பலம் வாய்ந்ததாக உள்ளது.

 1. ஜோ ரூட்‌ (கேப்டன்‌)
 2. ஜேம்ஸ்‌ ஆண்டர்சன்‌
 3. ஜானி பேர்ஸ்டோவ்‌
 4. டாம்‌ பெஸ்‌
 5. ஸ்டுவர்ட்‌ பிராட்‌
 6. ரோரி பர்ன்ஸ்‌
 7. ஜோஸ்‌ பட்லர்‌
 8. ஸாக்‌ கிராலே
 9. சாம்‌ கரன்‌
 10. ஹசீப்‌ ஹமீத்‌
 11. டேன்‌ லாரன்ஸ்‌
 12. ஜேக்‌ லீச்‌
 13. ஆலி போப்‌
 14. ஆலி ராபின்சன்‌
 15. டாம்‌ சிப்லே
 16. பென்‌ ஸ்டோக்ஸ்‌
 17. மார்க்‌ வுட்‌

Views: - 160

0

0

Leave a Reply