சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கைக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Author: Udayaraman
25 July 2021, 10:26 pm
Quick Share

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்து 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 3ம் வரிசையில் இறங்கி கேப்டன் தவானுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடி 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். 4ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 34 பந்தில் 50 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழக்க, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.இஷான் கிஷன் 14 பந்தில் தன் பங்கிற்கு 20 ரன்களை சேர்த்து கொடுக்க, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த இந்திய அணி, 165 ரன்கள் என்ற இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.

Views: - 189

0

0