தென்னாப்ரிக்க 2வது டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி திடீர் விலகல் : முக்கிய வீரருக்கு வாய்ப்பு… கேப்டன் பொறுப்பேற்றார் கேஎல் ராகுல்..!!

Author: Babu Lakshmanan
3 January 2022, 1:32 pm
KL-Rahul-and-Virat - updatenews360
Quick Share

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பார்க்கில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே, கேப்டவுன் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியால் கிடைத்த புதுத்தெம்புடன் இந்திய அணி விளையாடும். அதேவேளையில், கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் தென்னாப்ரிக்க அணி ஆயத்தமாகியிருக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி திடீரென விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுவலியின் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் இடம்பிடித்துள்ளார்.

கோலியின் விலகலைத் தொடர்ந்து கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, ஒருநாள் தொடருக்கான கேப்டனாகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதேபோல, தென்னாப்ரிக்கா அணியிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிகாக் ஓய்வை அறிவித்து விட்டதால், அவருக்கு பதிலாக கயில் வெரியினேவும், மல்டருக்கு பதிலாக ஒலிவியரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Views: - 707

0

0