அட்டகாசமான ஆரம்பம்… தொடரும் ஷமியின் வேட்டை : தென்னாப்ரிக்காவுக்கு 305 ரன்களை இலக்கு நிர்ணயம்… சாதிக்குமா இந்தியா…?

Author: Babu Lakshmanan
29 December 2021, 6:49 pm
india test - shami - updatenews360
Quick Share

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.

சென்சூரியனில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய தென்னாப்ரிக்கா 197 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 130 ரன்கள் முன்னிலையில் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி.

4வது ஆட்டம் இன்று தொடங்கியதும் தென்னாப்ரிக்கா அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இதனால், இந்திய பேட்ஸ்மென்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக பண்ட் 34 ரன்களும், கேஎல் ராகுல் 23 ரன்களும், ரகானே 20 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்ரிக்கா அணி தரப்பில் ரபாடா, ஜேமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், இங்கிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், 305 ரன்கள் தென்னாப்ரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாள் ஆட்டமில்லாமல், மேலும் ஒரு நாள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் முடிவு கிடைத்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு போட்டியின் 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷமி வீசிய அந்த ஓவரில் தொடக்க வீரர் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே வேகத்தில் இந்திய அணி செயல்படுமானால், வெற்றி இந்தியாவுக்கு சாதகமாகும்.

Views: - 1006

0

0