இந்தியா – இங்., மோதும் 2வது சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி!!!

1 February 2021, 1:58 pm
Chennai test - updatenews360
Quick Share

சென்னையில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ் போட்டி பிப்ரவரி 5 – 9 வரை, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதியளித்துள்ளது. இதனால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது, ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0