பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 3வது டெஸ்டில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி..!!
Author: Babu Lakshmanan25 August 2021, 7:40 pm
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோகித் சர்மாவை தவிர்த்து பிற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
கேஎல் ராகுல் (0), புஜாரா (1), கோலி (7) ஆகியோர் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். பின்னர் வந்த ரகானே ஓரளவுக்கு தாக்கு பிடித்தார். ரகானே (18), பண்ட் (2) ஜடேஜா (4) ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர்.
கடந்த போட்டியில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பும்ரா, சமி இந்த முறை ரன் எதுவுமின்றி அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
0
0