செவல தாவுடா தாவு… 4வது டெஸ்டிலும் சொதப்பும் இந்திய வீரர்கள்.. முதல் நாளை தாண்டுமா..?

Author: Babu Lakshmanan
2 September 2021, 5:56 pm
india vs england - updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதேபோல, இங்கிலாந்து அணியிலும் இருமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 11 ரன்னுடனும், ராகுல் 17 ரன்னுடனும், புஜாரா 4 ரன்னுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால் 40 ரன்கள் எடுப்பதற்கு முன்னதாகவே இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

மதிய உணவு இடைவேளை வரையில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. கேப்டன் கோலி 18 ரன்னுடனும், ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Views: - 499

0

0