சென்னை டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!

22 January 2021, 9:55 pm
Quick Share

சென்னையில் நடக்க உள்ள இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் பிசிசிஐயின் வழிகாட்டுதல் படி கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில், “கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை” என்றார்.

மேலும் கடந்த ஜனவரி 20ம் தேதி தமிழக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி, பிசிசிஐயின் வழிகாட்டுதளின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “தற்போது வைரஸ் சூழ்நிலை காரணமாக பிசிசிஐ இரு அணி வீரர்களின் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் (பிப்ரவரி 5 மற்றும் 17) சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்தில் நடத்தப்படும்” என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

இதற்கிடையில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி இந்திய அணி சென்னை செல்லும் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்தது போலவே பயோ பவுள் முறையில் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக வீரர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக இந்திய அரசு சமீபத்தில் விளையாட்டுப் போட்டிகளை 50 சதவீத ரசிகர்களுடன் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருந்தது. ஆனால் வீரர்கள் பாதுகாப்பு கருதி இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Views: - 18

0

0