ஆமை வேக ஆட்டத்தில் இங்கிலாந்து… அசத்திய அஸ்வின்.. தெறிக்கவிட்ட பும்ரா..!!!

5 February 2021, 12:12 pm
ashwin - updatenews360
Quick Share

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் சிப்ளே நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். 20 ஓவர்களை கடந்த பிறகும், ஆமை வேகத்திலான ஆட்டத்தையே அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, மண்ணின் மைந்தன் அஸ்வினிடம் விராட் கோலி பவுலிங்கை ஒப்படைத்தார். அவரும் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், சிறப்பாக ஆடி வந்த பர்ன்ஸின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதைத் தொடர்ந்து, உள்ளூரில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பும்ராவும், லாரன்ஸை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பி அமர்க்களப்படுத்தினார்.

இதனால், உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சிப்ளே 26 ரன்னுடனும், கேப்டன் ரூட் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Views: - 26

0

0