சென்னை டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி?

21 January 2021, 3:50 pm
kohli - test - updatenews360
Quick Share

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்கக் கோரி பிசிசிஐ தமிழக கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி 2020க்கு பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக மைதானத்தில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் சுமார் 50 சதவீத ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்க தமிழக கிரிக்கெட் போடும் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கிடையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி தொடர் போட்டிகள் ரசிகர்களின் அனுமதிக்கப்படாமல் நடத்தப்படுகிறது. இதேபோல அடுத்தடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் நடக்கவுள்ள அகமதாபாத் மற்றும் புனேவிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக இந்திய அணி ரசிகர்கள் நேரடியாக மைதானங்களில் போட்டியைக் கண்டுகளித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தான். அந்த தொடர் கடந்த ஜனவரி 2020 இல் நடந்தது. அதற்குப் பின்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் தொடர்களான ரஞ்சிக்கோப்பை மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் கூட ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மைதானங்களில் ரசிகர்களை அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இங்கிலாந்து தொடர் அட்டவணை

டெஸ்ட் போட்டிகள்
பிப் 5 – 9 : முதல் டெஸ்ட், சென்னை
பிப் 12 – 17 : இரண்டாவது டெஸ்ட், சென்னை
பிப் 24 – 28 : மூன்றாவது டெஸ்ட், அஹமதாபாத்
மார்ச் 4- 8: நான்காவது டெஸ்ட், அஹமதாபாத்

டி-20
மார்ச் – 12: முதல் டி-20, அஹமதாபாத்
மார்ச் – 14: இரண்டாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 16: மூன்றாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 18: நான்காவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 20: ஐந்தாவது டி-20, அஹமதாபாத்

ஒருநாள்
மார்ச் – 23: முதல் ஒருநாள், புனே
மார்ச் – 26: இரண்டாவது ஒருநாள், புனே
மார்ச் – 28: மூன்றாவது ஒருநாள், புனே

Views: - 0

0

0