நியூசி., டெஸ்ட் : ஸ்ரேயாஷ் – ஜடேஜாவின் வேற லெவல் ஆட்டம்… சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி…!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 6:30 pm
shreyas - jadeja - updatenews360
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்திய 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் ரகானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மயாங்க் அகர்வால் (13) ஏமாற்றம் அளித்தாலும், கில் (52), புஜாரா (26), ரகானே (35) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர், ஜடேஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். இதனால், இந்திய அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஷ் (75), ஜடேஜா (50) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணியின் இன்றைய ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 177

0

0

Leave a Reply