இந்தியாவின் கனவை தகர்த்த ரவீந்திரா… நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த இந்தியா : போராடி சமன் செய்தது நியூசி.,!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 4:58 pm
india - newzealand 6- updatenews360
Quick Share

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் கடந்த 24ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 345 ரன்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விளையாடி நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 49 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது.

ஆனால், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஷர் படேல், சஹா இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பவுலர்கள் திணறினர். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. விருதிமான சஹா (61), அக்ஷர் படேல் (28) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அதிகபட்சமாக, ஸ்ரேயாஷ் ஐயர் 65 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 284 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 3 ரன்கள் எடுத்திருந்த போது யங்-கின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். இதனால், லாதமுடன் நைட் வாட்ச்மேனாக சோமர்வில்லே களமிறக்கப்பட்டார். 4வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.

india - newzealand - updatenews360

இந்த நிலையில், இரு அணிகளும் வெற்றி வாய்ப்புடன் இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கின. ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சை இருவரும் நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினர். இந்திய பவுலர்கள் எவ்வளவு போராடியும் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினர். பின்னர், ஒரு வழியாகஉணவு இடைவேளைக்கு பிறகு சோமர்வில்லேவின் விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி வீரர்கள் தாக்கு பிடிக்கவில்லை. 90வது ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இன்னும் 8 ஒவர்கள் எஞ்சிய நிலையில் நியூசிலாந்து அணியின் ரவீந்திரா, அஜீஷ் படேல் பேட் செய்தனர். இருவரும் நேர்த்தியாக ஆடி விக்கெட்டை தக்க வைத்தனர். இதனால், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ரவீந்திரா மட்டும் 91 பந்துகளை தாக்கு பிடித்து, அணியின் தோல்வியை தடுத்து நிறுத்தினார். இது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

Views: - 941

0

0