விளையாட்டு

வாழ்வா? சாவா? இந்தியாவின் அரையிறுதியை நிர்ணயிக்கும் நியூசிலாந்து!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தற்காலிகமாக இழந்திருக்கும் இந்தியா, நியூசிலாந்து அணியின் தோல்வியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

துபாய்: வளைகுடா நாடான துபாயில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏ பிரிவில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. அதேபோல் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய விளையாடி வருகின்றன.

இதன் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதுவரையிலான ஆட்டத்தில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வெற்றியை, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பெற்றது.

ஆனால், முதலில் நியூசிலாந்து அணியிடமும், நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து…. யூடியூபருடன் ஊர் சுற்றும் நடிகை நடாஷா – வீடியோ!

இருப்பினும், 0.322 என்ற நிகர ரன் ரேட் என்பதன் அடிப்படையில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த நிலையில் தான், ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து அணி கட்டாயம் தோற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழையும்.

அது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யுமானால், 53 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதேநேரம், பாகிஸ்தான் இரண்டாவதாக பேட்டிங் இறங்கினா, 11 ஓவர்களுக்குப் பின்பு வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

இவ்வாறு நிகழுமானால், பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் இந்திய அணிக்கு இணையாக உயராது. அதேபோல், நியூசிலாந்து அணியின் நிகர ரன் ரேட் இந்திய அணியை விட குறைவாகவே இருக்கும் என்பதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியை அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை பெறும்.

இப்படிப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இந்த ஆட்டம், இன்று இரவு 07.30 மணிக்கு துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.