டோக்கியோ ஈட்டி எறிதலில் இந்திய வீரர் அபாரம்: ஒரே அட்டெம்ப்ட்டில் 86.65 மீட்டர்..இறுதி போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா..!!

Author: Aarthi
4 August 2021, 10:09 am
Quick Share

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று பெறும் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Tokyo Olympics: Neeraj Chopra qualifies for men's javelin final with throw  of 86.65m in 1st attempt - Sports News

தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, சிறப்பாக விளையாடி இருக்கும் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளார். ஒலிம்பிக் தொடரில், இந்திய வீரர் ஒருவர் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

முன்னதாக, 2016ம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் ரெக்கார்டு படைத்தார். அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்.

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி ||  Javelin Thrower Neeraj Chopra qualifies for Tokyo Olympic

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.50 மீட்டர் தூரம் இருந்தால் போதுமானது. ஆனால், முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. இன்று நடைபெற்ற க்ரூப் ஏ தகுதிச்சுற்றுப் போட்டியில், நீர்ஜ் சோப்ரா முதல் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 395

1

0