கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பவுலர்… அட, உண்மையிலேயே அதிசயமாத்தான் இருக்கு..!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 3:34 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் மாலனின் (77) அதிரடியால், 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதலில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றது.

இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், ஒரு இந்திய பவுலர் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்களைப் பொறுத்தவரையில் விராட் கோலி 7 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, 3 முறை தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார் புவனேஸ்வர் குமார்.

Views: - 1897

0

0