ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்… குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் லவ்லினா..!!!

Author: Babu
4 August 2021, 11:44 am
lovlina - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையின் அரைஇறுதியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், துருக்கி நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பூசெனஸ் சர்மினெலி எதிர்கொண்டு விளையாடினார்.

ஆரம்ப முதலே லவ்லினாவுக்கு துருக்கி வீராங்கனை கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால், அவரால் புள்ளிகள் ஏதும் பெற முடியவில்லை. அதே சமயத்தில் துருக்கி வீராங்கனை புள்ளிகளை குவித்தார். இறுதியில் 0-5 என்ற கணக்கில் லவ்லினா தோல்வியை சந்தித்தார். இதன்மூலம், இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால், லவ்லினாவுக்கு வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒலிம்பிக்கில் லவ்லினா வெற்றி பெற வேண்டும் என்று அவரது சொந்த மாநிலமான அசாம் மட்டுமல்லாமல், இந்தியாவே பிரார்த்தனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கமாகும். ஏற்கனவே, மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து ஆகியோரும் வெண்கலப்பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 357

1

0