மனைவியை பிரிந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்: ஆயிஷா முகர்ஜியின் உருக்கமான பதிவு இணையத்தில் வைரல்!!

By: Aarthi
8 September 2021, 11:52 am
Quick Share

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடனான விவகாரத்து குறித்து அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவரான ஷிகர் தவான்,தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷா முகர்ஜி,தனது முதல் கணவரை பிரிந்து 2012ம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார்.

ஷிகர் தவானுடன் விவாகரத்து

அதன்பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் திருமண பந்தத்தில் இருந்து வந்த நிலையில்,தற்போது அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக,ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.அதில்,

நான் 2 வது முறை விவாகரத்து ஆகும் வரை விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் எப்படி இவ்வளவு சக்திவாய்ந்த அர்த்தங்களையும் சங்கங்களையும் கொண்டிருக்கும் என்பது வேடிக்கையானது. விவாகரத்து பெற்றவராக இதை நான் முதலில் அனுபவித்தேன்.

முதல் முறையாக நான் விவாகரத்து செய்தபோது நான் மிகவும் பயந்தேன். நான் தோல்வியடைந்ததாக உணர்ந்தேன், அந்த நேரத்தில் நான் ஏதோ தவறு செய்ததாக நினைத்தேன்.

விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். விவாகரத்து என்றால் நீங்கள் உங்களால் முடிந்ததை செய்து உங்கள் சிறந்ததை முயற்சித்தாலும் சில நேரங்களில் பலனளிக்காது,பரவாயில்லை. விவாகரத்து என்பது எனது அற்புதமான உறவுகள்,புதிய உறவுகளில் முன்னேற எனக்கு சிறந்த பாடங்களை கற்றுக்கொடுத்தது. விவாகரத்து என்பது நான் நினைத்ததை விட நான் வலிமையானவள் என்பதை உணர்த்தியது என்று உணர்ச்சிப் பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Views: - 518

0

0