டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய அணி…அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி..!!

Author: Aarthi Sivakumar
29 July 2021, 8:36 am
Quick Share

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின. இதில், முதல் இரு காலிறுதி நேரத்தில் கோல்கள் எதுவும் போடப்படவில்லை.

போட்டியின் 43வது நிமிடத்தில் இந்தியாவின் வருண் குமார் அடித்த கோல் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் கோல்கள் எதுவும் விழாத நிலையில், போட்டி முடியும் நேரத்தில் இந்திய அணியினர் அதிரடியாக விளையாடினர். போட்டியின் இறுதியில் 58வது நிமிடத்தில் விவேக் சாகர் அடித்த கோல் மற்றும் 59வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த 2 கோல்கள் அணியின் வெற்றியை முடிவு செய்தன.

இதனால், 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Views: - 435

0

0