சவுதாம்டனில் மழைக்கு நடுவே கெத்து காட்டும் இந்தியா : 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் நியூசிலாந்து!!

22 June 2021, 6:50 pm
india team - updatenews360
Quick Share

சவுதாம்டனில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டத்தின் போது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா (34), சுப்மன் கில் (28) ஆட்டமிழந்ததை தொடர்ந்து, கேப்டன் கோலி – ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு மளமளவென விக்கெட்டுக்கள் சரிந்தன. கோலி (44), ரகானே (49) ரன்களில் வெளியேறிய நிலையில், பின்கள வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த நியூசிலாந்து அணி 3ம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. கான்வே (54), லாதம் (30) ரன்கள் எடுத்தனர். இதனிடையே, 4வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், 5வது நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் சவாலாக திகழ்ந்தனர். டெய்லர் (11), நிகோல்ஸ் (7), வாட்லிங் (1) என 34 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 3 விக்கெட்டுக்களை அந்த அணி இழந்தது.

மதிய உணவு இடைவெளி வரை அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

Views: - 381

1

0