டோக்கியோ ஒலிம்பிக் : வட்டு எறிதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை! வில்வித்தையில் ஏமாற்றம் தந்த அதானு தாஸ்!!

Author: Udayachandran
31 July 2021, 10:27 am
Olympic- Updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9வது நாளான இன்று நடந்த மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையின் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதானு தாஸ் – ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்காரு புருகாகாவுடன் மோதினார்.

Maalaimalar News: Tamil News Archery Mens Individual Eliminations - Atanu  Das loses to Takaharu Furukawa

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸை வீழ்த்தினார் புருகாவா. இந்தத் தோல்வியை அடுத்து வில்வித்தையில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

Views: - 252

0

0