‘கிங்’ கோலியின் 1258 நாள் அசைக்க முடியாத பயணத்தை உடைத்த பாக்., வீரர் பாபர் அசாம்!

14 April 2021, 3:03 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி நம்பர் -1 இடத்தை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிடித்தார். இதன் மூலம் கோலியின் 1258 நாள் பயணம் முடிவிற்கு வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர்-1 இடத்தை இழந்துள்ளார். இந்நிலையில் கோலியை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான பாபர் அசாம் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தானிலிருந்து நம்பர்-1 இடத்தை பெறும் நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார் பாபர் அசாம். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 13 புள்ளிகள் கூடுதல் பெற்று 865 புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் விராட் கோலியை விட கூடுதலாக 8 புள்ளிகள் பெற்று பாபர் அசாம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 2015 முதல் விளையாடி வருகிறார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக 837 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார் அசாம். இந்த தொடரில் 103 மற்றும் 94 ரன்கள் என அசத்த 13 புள்ளிகள் கூடுதலாக பெற்று தற்போது முதல் இடத்துக்கு முன்னேறினார் அசாம். இதன்மூலம் நம்பர் -1 இடத்தில் விராட் கோலியின் 1258 நாட்கள் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் பாபர் அசாம்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியான்தத் (1988-89) மற்றும் முகமது யூசப் (2003) ஆகியோரை தொடர்ந்து நம்பர் 1 இடத்திற்கு முன்னேறிய 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார் பாபர் அசாம். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பாபர் அசாம் அதிகபட்சமாக ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். தற்போது இவர் டெஸ்ட் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இதேபோல டி20 கிரிக்கெட் தொடரில் தொடருக்கான தரவரிசை பட்டியலில் பாபர் மூன்றாவது இடத்தில் தற்போது உள்ளார். முன்னதாக இவர் நம்பர் 1 இடம் பிடித்திருந்தார்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர்களைத் தவிர, எந்த இந்திய வீரர்களும் ஒரு பேட்ஸ்மேன்களும் டாப்-10 இடங்களில் இடம் பெறவில்லை. சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா நான்காவது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், நியூசிலாந்தின் மாட் ஹென்ரி முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ஆல் ரவுண்டர் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாவது இடம் பிடித்துள்ளார். வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹாசன், பென் ஸ்டோக்ஸ், முகமது நபி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அதிக நாட்கள் நம்பர்-1 இடத்தில் இருந்த வீரர்கள் பட்டியல்

விவ் ரிச்சர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ் ) : 1748 நாட்கள்
மைக்கெல் பெவன் (ஆஸி) : 1259 நாட்கள்
விராட் கோலி (இந்தியா) : 1258 நாட்கள்
டீன் ஜோன்ஸ் (ஆஸி) : 1146 நாட்கள்
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) : 1049 நாட்கள்

Views: - 24

0

0