ஜடேஜா, அஸ்வின் உள்ளே… மேட்ச் வின்னர் பண்ட்க்கும் வாய்ப்பு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு

17 June 2021, 8:23 pm
ICC Test - Updatenews360
Quick Share

சென்னை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காண 4,000 ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர்.
நாளை முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், எதிர்பார்த்ததை போலவே, ஜடேஜா, அஸ்வின் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆனால், முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. விரிதிமன் சஹாவுக்கு பதிலாக பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் விபரம் பின்வருமாறு :- விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

Views: - 317

0

0