முக்கிய வீரர் விலகல்… சூர்யகுமாருக்கு அடித்தது ஜாக்பாட்… நியூசி., டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 November 2021, 5:51 pm
rahane yadav-- updatenews360
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. புதிய கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் கூட்டணியுடன் பங்கேற்ற முதல் டி20 தொடரில், நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அசத்தியது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அந்தப் போட்டிக்கு மட்டும் ரகானே கேப்டனாக செயல்பட இருக்கிறார். மேலும், ரோகித் சர்மா, பண்ட், பும்ரா மற்றும் சமி ஆகியோர் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், இரு போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய அணியின் வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.ரகானே தலைமையிலான இந்திய அணியில் மயாங்க் அகர்வால், புஜாரா, சுப்மண் கில், ஸ்ரேயாஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், விருதிமன் சஹா, கேஎஸ் பரத், ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Views: - 237

0

0

Leave a Reply