இந்தியா – இங்கிலாந்து தொடரில் இந்திய அம்பயர்கள் அறிமுகம்!

30 January 2021, 6:41 pm
indian umpire - updatenews360
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த அனில் சவுத்ரி, விரேந்திர சர்மா உள்ளிட்டோர் அம்பயர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள் அம்பயர்களாக நிறுத்தப்படுவது மிகவும் அரிதான சம்பவம் ஆகும். இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இந்த அரிய நிகழ்வு அரங்கேற உள்ளது. ஐசிசி நியூட்ரல் அம்பயர்கள் பாலிசியை கொண்டு வந்ததற்கு பிறகு முதன்முறையாக இந்திய அம்பயர்கள் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர்களாக நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியைச் சேர்ந்த சவுத்ரி ஒருவர் மட்டுமே முன்னதாக ஐசிசியின் எலைட் பேனல் இவருடன் நிதின் மேனன் பெயரும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி துவங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியின் அம்பயர்கள் பட்டியலில் உள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த சர்மா மற்றும் மேனன் உள்ளிட்டவர்கள் 2வது டெஸ்ட் போட்டியில் அம்பயர்களாக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சவுத்ரி நான்காவது அம்பயராக இருப்பார் என்றும் ஐசிசி இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேனனுக்கு இதுவே இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டியில் அம்பயராக நிற்க கிடைத்த முதல் வாய்ப்பு. கடந்த 2019 வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் அம்பயராக நின்றார். இந்த போட்டிக்கு நடுவராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் இடம்பெற உள்ளார். இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார் ஸ்ரீநாத். ஆனால் இதுவே இந்திய அணி பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு நடுவராக இவர் செயல்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதேநேரம் பிசிசிஐயின் உயர்தர அம்பயரான அனந்தபத்மநாபன் சர்வதேச தொடரில் முதல் முறையாக நான்காவது டெஸ்ட் போட்டியில் செயல்பட உள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு நான்காவது அம்பயராக இவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை தடைபடாமல் நடத்துவதற்காக உள்ளூர் அம்பயர்களை நியமிக்க ஐசிசி இடைக்காலமாக அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அம்பயர்களாக செயல்படும் மிகவும் அரிதான நிகழ்வு தற்போது அரங்கேற உள்ளது.

Views: - 0

0

0