ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏப்ரல் 8ம் தேதி ஆப்ரேஷன்!!

Author: Udhayakumar Raman
2 April 2021, 1:47 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வரும் ஏப்ரல் 8ம் தேதி ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அடித்த பந்தை பவுண்டரிக்கு செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியில் காயமடைந்தார். இதனால் எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் இவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இவரின் தோள்பட்டை பாதி அளவுக்கு இறக்கம் கண்டுள்ளதாகவும் இதற்காக வரும் ஏப்ரல் 8ம் அறுவைசிகிச்சை செய்து கொள்ள உள்ளார். இந்த காயம் முழுமையாகக் குணமடைய நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவைப்படும் என்பதால் இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

தவிர இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கவுண்டி கிரிக்கெட் அணியாக லான்ஷயர் அணிக்காக தொடரிலும் பங்கேற்கயிருந்தார். ஆனால் தற்போது அந்த தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 9ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது.

இதற்கிடையில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டிகளில் வரும் செப்டம்பர் மாதம் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் தான் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் பிசிசிஐ தற்போது வெளியிடவில்லை.

Views: - 234

0

0