மைதானம் இல்லேன்னா என்ன வீடு இருக்குல்ல” – இந்திய அணியின் பீல்டிங் கோச் வெளியிட்ட அசத்தல் வீடியோ…!

23 March 2020, 10:28 am
Quick Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அடுத்த இரண்டு மாதங்கள் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்தாகியுள்ளன. மேலும் அனைவரும் எதிர்பார்த்திருந்த IPL போட்டிகள் இனி நடக்குமா நடக்காதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வைகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்ட்டிங் கோச்சான ஸ்ரீதர் ராவ் தனது வீட்டிலிருந்தே எளியமுறை செய்யமுடிந்த உடற்பயிற்சியினை செய்துகாட்டி ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்டு இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மாயங்க் அகர்வால் தனது வீட்டிலிருந்து செய்த உடற்பயிற்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


இந்தியா முழுவதும் தற்போது மக்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் வேலையில் இதுப்போன்ற வீடியோக்கள் மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அனைவரையும் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்கவேண்டுமென்று வலியுறுத்திவருகின்றனர்.

Leave a Reply