பேட்டருக்கு இனி 2 நிமிஷம் தான் டைம்… 2,3 முறை பிட்ச்சானால் இனி அது Dead Ball இல்ல… அக்.,1 முதல் புதிய விதிகள் அமல்!!!

Author: Babu Lakshmanan
20 September 2022, 7:25 pm
Quick Share

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடைபிடிக்கப்படும் விதிகளில் மாற்றம் செய்து ஐசிசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை எம்.சி.சி. குழு வகுத்து வருகிறது. இந்த விதிகளை மீறும் அணிகள் மற்றும் வீரர்களுக்கு அபராதமும், போட்டிகளில் விளையாடாத விதமாக தடைகளும் விதிக்கப்படும்.

இந்த நிலையில், கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய விதிகள் பின்வருமாறு :-

பந்தில் எச்சில் வைத்து தடவுவதற்கு நிரந்த தடை விதிப்பு. கொரோனா காலக் கட்டத்தில் விதிக்கப்பட்ட தற்காலிக தடை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பந்து வீச்சாளர்கள், ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் கடினமாக மாறி விடும்.

விக்கெட் விழுந்ததும் அடுத்த பேட்ஸ்மேன்கள் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வர வேண்டும். இதே போன்று டி20 போட்டிகளில் 90 விநாடிக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்கு வர வேண்டும்.

புது பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன் கேட்ச்சாகி அவுட்டாகும் போது புது பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். பழைய முறைப்படி, புது பேட்ஸ்மேன் கேட்சாகி அவுட்டாகும் தருணத்தில், எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் அவரைதாண்டி ரன் ஓடி இருந்தால், அவரே அடுத்த பந்தை பிடிக்கும் விதி இருந்தது.

ரன் அவுட் விதி பழைய விதிப்படி பந்து இரண்டு, மூன்று பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதனை நடுவர் Dead ball என்று அறிவிப்பார். தற்போது அது நோ பால் என்று அறிவிக்கப்படும்.

மேலும் , பந்து வீசும் முன் பேட்ஸ்மேன் கோட்டை விட்டு நகர்ந்தால், அப்போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி ரன் அவுட் செய்ய புதிய விதி அனுமதிக்கப்படுகிறது.

பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் தருணத்தில் ஃபில்டர்கள், வேறு இடத்திற்கு மாற முயற்சித்தால், அது டெட் பால் என அறிவிக்கப்பட்டு, 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும்.

இதே போன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், பவுண்டரி எல்லையில் ஒரு ஃபில்டர்களை குறைக்கும் விதி இனி அடுத்த ஆண்டு முதல் ஒருநாள் போட்டியிலும் பின்பற்றப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1159

0

0