2021-லும் இல்லானா… வேற வழியே இல்லை : சிக்கலில் டோக்கியோ ஒலிம்பிக்..?

21 May 2020, 5:04 pm
Tokyo_2020_olympics_buget
Quick Share

அடுத்த ஆண்டும் டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படவில்லையென்றால், ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜுலை மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளில் ஜப்பான் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, அடுத்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவில்லையெனில், அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டும் டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படவில்லையென்றால், ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டு குழுவில் 3000 பேர் முதல் 5000 பேரை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. மீண்டும் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைத்து விட்டு, பின்னர் உலகின் பிற விளையாட்டுக்களை மாற்றியமைக்க முடியாது,” எனக் கூறினார்.

Leave a Reply