ஐபிஎல்லில் கால்பதிக்கப் போகும் 9வது அணி..? அணியை வாங்குவதற்கான போட்டியில் இருக்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?

14 November 2020, 3:04 pm
Vivo Pulls Out of IPL Title Sponsorship for This Year
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9வது அணி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த அணியை வாங்குவதற்கான போட்டி அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்திய முடிவடைந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் மேலும் ஒரு அணியை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. புதிய அணிக்கான டெண்டர் விவரம் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத், குஜராத்தை சார்ந்து இருக்கும் இந்த அணியை வாங்குவதற்காக தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது நடிகர் மோகன் லாலும், பைஜூஸ் நிறுவனமும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், இந்த அணியை வாங்க மோகன்லால் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

அதேவேளையில், முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியும், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோரும் ஒன்பதாவது அணிக்கு ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 22

0

0