அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகள் மிஸ் செய்யும் சென்னை : ரசிகர்கள் ஏமாற்றம்..!

23 September 2020, 6:52 pm
ambati rayudu - updatenews360
Quick Share

காயம் காரணமாக விலகி இருக்கும் சென்னை அணியின் நம்பிக்கை வீரர் அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் அம்பதி ராயுடு.

நல்ல ஃபார்மில் உள்ள ராயுடு நேற்று காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. மேலும், பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் சரியாக சோபிக்காததால் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால், ராயுடு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் எழுந்தது.

இந்த நிலையில், சென்னை அணியின் நம்பிக்கை வீரராக இருந்து வரும் அம்பதி ராயுடு, சில போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
சென்னை அணி வரும் 25-ந்தேதி 3-வது போட்டியில் டெல்லி அணியையும், அக்டோபர் 2-ந்தேதி ஐதராபாத அணியையும் எதிர்கொள்கிறது.

Views: - 8

0

0