சென்னையின் வெற்றிப் பயணம் தொடருமா..? இன்று ராஜஸ்தானுடன் மோதல்..!

22 September 2020, 2:25 pm
chennai - rajastan - updatenews360
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் சென்னை அணி, ராஜஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ம் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட தோனி தலைமையிலான சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை வெற்றியுடன் தொடங்கியதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு முரளி விஜய், ஷேன் வாட்சன் ஏமாற்றம் கொடுத்தனர். மற்ற வீரர்கள் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில், அது சென்னை அணியின் கைகொடுக்கும். காயம் காரணமாக கடந்த போட்டியில் கயாம் காரணமாக விளையாடா பிராவோ, இந்தப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இருப்பினும், முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் சென்னை அணி களம் காணும்.

அதேவேளையில், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி விளையாடும். தந்தையின் உடல்நிலை குறைபாடு காரணமாக, சில போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விலகல் மற்றும் தனிமைப்படுத்துதலில் இருக்கும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடாதது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

இருப்பினும், பேட்டிங், பவுலிங்கில் சமபலம் கொண்ட இரு அணிகள் விளையாடும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Views: - 6

0

0