ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை நாளை வெளியீடு : ஐ.பி.எல் நிர்வாகம் அறிவிப்பு..!

5 September 2020, 3:56 pm
Quick Share

ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்.,19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21-ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்புவதாகவும், ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய பல்வேறு கருத்துகள் வெளியானது. மேலும், ஐபிஎல் வீரர்களுடன் சென்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில், ஐபிஎல் போட்டி நடத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து ஒருவளியாக ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0