சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்… சைலண்ட்டாக வெற்றி பெற்ற டெல்லி… புள்ளிப்பட்டியல் முதலிடத்திற்கு முன்னேற்றம்!!!

Author: Babu Lakshmanan
25 September 2021, 7:36 pm
delhi - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அபுதாபியில் இன்று பிற்பகல் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், ஸ்ரேயாஷ் ஐயர் (43), கேப்டன் பண்ட் (24), ஹெட்மயர் (28) ஆகியோர் ஓரளவுக்கு ரன்கள் குவித்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சோபிக்க தவறினர். அந்த அணியின் கேப்டன் சாம்சன் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால், அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்மூலம், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, தனது 7வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில், 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இது 4வது தோல்வியாகும்.

Views: - 367

0

0