ஒரே ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நரேன் : கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 7:47 pm
KKR Won- Updatenews360
Quick Share

டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் 41வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே நிதானமாக விளையாடிய தவான் 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 1 ரன் எடுத்து வெளியேற களம் கண்ட ஹெட்மியர் 4 ரன், லலித் யாதவ், ஆக்சர் படேல் டக் அவுட் ஆனார்கள். பின்னர் களத்தில் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தது.

எளிதான இலக்கை கொல்கத்தா அணி எளிதாக எதிர்ககொள்ளும் என நினைத்திருந்த நேரத்தில் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் 2 பவுண்டரி விளாசி 15 எடுத்து லலித் யாதவ் ஓவரில் போல்ட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய வீரர் ராகுல் திரிபாதி 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 30 ரன் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய இயோன் மோர்கன் டக் அவுட் ஆனார்.

பெருதும் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து கொல்கத்தா விக்கெட்டை இழந்ததால் டெல்லி வெற்றி பெரும் சூழல் இருந்தது. அப்போது 16-வது ஓவரில் களமிறங்கிய சுனில் நரேன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் எடுத்ததால் வெற்றி கொல்கத்தா பக்கம் திரும்பியது.

இறுதியாக கொல்கத்தா 18.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், புள்ளி பட்டியலில் கொல்கத்தா 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த ஆட்டம் மூலம் டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு கொல்கத்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Views: - 318

0

0