Captain VS Mentor…. சென்னை – பெங்களூரூ அணிகள் இன்று பலப்பரீட்சை : மரண வெயிட்டிங்கில் ஐபிஎல் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 2:12 pm
dhoni - kohli - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரூ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் 35வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரூ அணியும் மோதுகின்றன. 6 வெற்றி, 2 தோல்விகளோடு 12 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சென்னை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2வது கட்டப் போட்டியை, மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

அதேவேளையில், 5 வெற்றி, 3 தோல்விகளோடு 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரூ அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரூ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுகிறார். அதேவேளையில், டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், இந்திய அணியின் கேப்டன் கோலி – ஆலோசகர் தோனியும் மோத இருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 357

0

0