ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அரிய சாதனைகளை படைக்கப் போகும் ‘தல’ தோனி!!

Author: Babu
2 October 2020, 5:52 pm
ms-dhoni-csk - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணிகளின் புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடங்களை அலங்கரித்து வந்த சென்னை அணிக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று நடக்கும் லீக் போட்டியில் ஐதராபாத்தை எதிர்கொண்டு விளையாடும் சென்னை அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே, இன்றைய போட்டியில் களமிறங்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி, பல்வேறு அரிய சாதனைகளை படைக்க உள்ளார். 13 ஐபிஎல் தொடர்களில் வைத்து அதிகமுறை பிளே ஆப்பிற்கு சென்னை அணி முன்னேறியிருப்பதால், சென்னை அணியின் வீரர்கள் மட்டும் அதிக போட்டிகளில் விளையாடியிருப்பார்கள். அந்த வகையில், கடந்த போட்டியில் ரெய்னா (193 போட்டிகள்) விளையாடிய போட்டிகளை சமன் செய்தார் தோனி. இன்றைய போட்டியின் மூலம் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.

MS-Dhoni-updatenews360

இதேபோல, இன்றைய போட்டியில் 2 சிக்சர் அடிக்கும் பட்சத்தில் தோனி, 300 சிக்சர்களை அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெறுவார். அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் வரிசையில் கெயில் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 2வது இடத்திலும் உள்ளார்.

மேலும், இன்றைய போட்டியில் 24 ரன்களை தோனி அடித்தால், ஐபிஎல் கிரிக்கெட்டில் 4,500 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரெய்னா, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

SK shares picture of MS Dhoni as IPL releases new ad campaign

விக்கெட் கீப்பர் என்ற முறையில் இன்று இருவரை தோனி ஆட்டமிழக்கச் செய்யும்பட்சத்தில், 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைப்பார். ஏற்கனவே, கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Views: - 35

0

0