மீண்டும் செல்லுபடியாகுமா தோனியின் யுக்தி..?? டெல்லிக்கு எதிரான போட்டியில் மீண்டும் கேதர் ஜாதவா..?

17 October 2020, 5:14 pm
MS-Dhoni-and-Kedar-Jadhav - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரவு போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அனைத்து முறையும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்ற அணி, 3 முறை கோப்பையை வென்றுள்ள அணி என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை அணிக்கு, இந்த ஆண்டு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடிய நிலையில், ( மும்பை, பஞ்சாப், ஐதராபாத்) 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அனுபவ வீரர்களான வாட்சன், ராயுடு, டூபிளசிஸ் உள்ளிட்ட வீரர்கள் சோபிக்க தவறுவதால், சென்னை அணியின் வெற்றி கேள்விக்குறியாகி வருகிறது. அதேவேளையில், பின்கள வரிசையில் வரும் தோனியும், வழக்கமான ஃப்னிசிங்கை செய்வதில் தடுமாறி வருகிறார்.

இந்த சூழலில், கடந்த ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில், சாம் கரன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு, புதிய வியூகங்களை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெறச் செய்தார் தோனி.

எனவே, 6 வெற்றிகளுடன் பலம் மிகுந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி புதிய யுக்தியை கையில் எடுப்பார் என்று தெரிகிறது. அந்த அணியில் ஃபார்மில் உள்ள ப்ரித்வி ஷா, தவான், ஸ்ரேயாஷ் ஐயர், ஸ்டொயினிஸ் உள்ளிட்டோரின் விக்கெட்டுக்களை சீக்கிரம் பட்சத்தில், இமாலய ரன் குவிப்பை கட்டுப்படுத்தப்படும். எனவே, அதற்கேற்ற வியூகங்களை தோனி வகுப்பார் என சென்னை அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதேவேளையில், சார்ஜா சிறிய மைதானம் என்பதால், இந்தப் போட்டியில் ஒரு பவுலரை குறைத்து விட்டு, பேட்ஸ்மேனை களமிறக்க தோனி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய சாவ்லாவை உட்கார வைத்து விட்டு, கேதர் ஜாதவை மீண்டும் களமிறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இன்று பிற்பகல் நடக்கும் மற்றொரு போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரூ – ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

Leave a Reply