‘ஐபிஎல் ஸ்பான்ஸர்’ – ரூ.222 கோடிக்கு தேர்வானது ட்ரீம் லெவன் நிறுவனம்..!

18 August 2020, 4:35 pm
Quick Share

ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை திருவிழாபோல் கொண்டாடும் ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இந்திய ரசிகர்கள் டி20 போட்டியை அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து ஆரம்பத்தில் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட அதிக அளவில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என, பிரிஜேஷ் படேல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் களமிரங்கி அசத்த 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ விலகியது.

இதனைதொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்த நிலையில், ஸ்பான்சர்ஷிப்க்கான தொகையாக ரூ.300 கோடியாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்தநிலையில், இந்தியாவின் முன்னனி நிறுவனங்களான ட்ரீம் 11, பைசூஸ், டாடா, அன்ஹக்கேடமி, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கான போட்டியில் களமிறங்கின.

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Views: - 3

0

0