ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் : பெங்களூரு – ராஜஸ்தான், கொல்கத்தா – டெல்லி மோதல்!!

Author: Babu
3 October 2020, 2:21 pm
rr vs rcb - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளும், கொல்கத்தா – டெல்லி அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாள்தோறும் ஒரு போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் முதல் வார இறுதியில் 2 போட்டிகள் நடக்கும் வகையில் அட்டவணை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் 15 லீக் போட்டியில் பெங்களூரூ – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2 வெற்றிளை பெற்றுள்ளன.

தோல்விக்கு பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரூ அணிக்கு, கேப்டன் கோலியின் ஆட்டம் மோசமாகத்தான் உள்ளது. அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் பட்சத்தில் அந்த அணி வலுவானதாக இருக்கும். ராஜஸ்தானை பொறுத்தவரையில் முன்னணி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரையில் இவ்விரு அணிகளும் 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் அணி 10ல் வெற்றியும், பெங்களூரூ 8லும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்களில் முடிவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.

அதேபோல, இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் 3வது வெற்றிக்காக போராடுகின்றன. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 23 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. இதில் 13-ல் கொல்கத்தாவும், 9-ல் டெல்லியும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

Views: - 47

0

0