பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறும் 4வது அணி எது…? மும்பைக்கு இத்தனை சோதனைகளா..? ராஜஸ்தான், கொல்கத்தாவுக்கும் கடும் சவால்…!!

Author: Babu Lakshmanan
5 October 2021, 1:13 pm
Quick Share

ஐபிஎல்லில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக வலம் வரும் மும்பை அணிக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

இதேநிலைமையோடு தான் ராஜஸ்தான் அணியும் மும்பையை எதிர்த்து இன்று விளையாட இருக்கிறத.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி, சென்னைக்கு எதிரான 190 ரன்கள் என்ற இமாலய இலக்கை பிடித்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணியும் 10 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. இதனால், பிளே ஆஃப் சுற்றிற்கு செல்ல வேண்டுமெனில் இன்றை போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் பிளே ஆஃப்பிற்கான வாய்ப்பு இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. எஞ்சிய இருபோட்டிகளிலும் முதலில் வெற்றி பெற வேண்டும். அதாவது, மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் தோற்கடித்தால், அவர்களை தொடரில் இருந்து வெளியேற்றி விடலாம். அதேவேளையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால், ரன்ரேட் அடிப்படையில், பிற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும்.

இன்று நடக்கும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் விளையாடும் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதேநிலைமைதான் மும்பை அணிக்கும். ஆனால், எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மும்பையால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாது. கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்தால்தான், மும்பையால் பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற முடியும். விளையாட்டில் சில சமயம் அதிசயங்கள் நடக்கும் என்பதால், என்னவென்றால் நடக்கலாம்.

Views: - 684

0

0