ஐபிஎல் தொடரில் இருந்து ஹசில்வுட் விலகல்.. மும்பையின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரை தட்டி தூக்கிய சென்னை… குஷியில் ரசிகர்கள்…!!!

9 April 2021, 12:40 pm
josh_hazlewood_CSK - updatenews360
Quick Share

சென்னை : ஐபிஎல் தொடரில் இருந்து ஹசில்வுட் விலகிய நிலையில், மும்பையின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துக் கொண்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2வது போட்டியில், சென்னை – டெல்லி அணிகள் நாளை மோதுகின்றன.

வாட்சன் ஓய்வுக்கு பிறகு சென்னை அணியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேபோல, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா ஆகியோரும் அணிக்கு புதிதாக எடுக்கப்பட்டுள்ளனர். இன்று ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹசில்வுட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனால், சென்னை அணியின் பந்து வீச்சு துறையில் பாதிப்பு ஏற்படுமோ..? என்று ரசிகர்கள் அச்சப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மும்பை அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பெஹரன்டிராப்பை சென்னை அணி எடுத்துள்ளது. இதன் மூலம், ஹசில்வுட்டின் விலகலை சென்னை அணி சரியாக ஈடுபட்டி இருப்பதாக சென்னை ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

Views: - 65

0

0