மீண்டும் முதலிடம் பிடித்த டெல்லி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Author: Udhayakumar Raman
22 September 2021, 11:33 pm
Quick Share

டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் களமிறங்கினர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இதனால், ஹைதராபாத் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியில் ரபாடா 3, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்க வந்த வேகத்தில் பிரித்வி ஷா 11 ரன்னில் நடையை கட்ட பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த தவான் அப்துல் சமத்திடம் கேட்சை கொடுத்து 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.அடுத்து இறங்கிய பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் பண்ட் 35, ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்கள் எடுத்து நின்றனர். இதனால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றுள்ளது.

Views: - 368

0

0