எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல் : கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் தகவல்

5 June 2021, 2:59 pm
dk-cummins -updatenews360
Quick Share

சென்னை : ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் விலகியதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள், பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்தது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில், டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என முடிவு செய்த பிசிசிஐ, எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் ஐக்கிய அரபு அமிரேட்சில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டரான கம்மின்ஸ் நடப்பு தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இயான் மார்கன் பங்கேற்பது குறித்து தற்போதைக்கு சொல்ல முடியாது. போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. பல விஷயங்கள் மாறலாம். மீண்டும் அணிக்கு என்னை தலைமை தாங்க சொன்னால், தயாராக உள்ளேன், எனக் கூறினார்.

Views: - 343

0

0

Leave a Reply