இந்த ஆறு நகரத்தில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள்: ஒரு இடத்தில் ரசிகர்ளுக்கு அனுமதியில்லை: பிசிசிஐ!

28 February 2021, 2:52 pm
BCCI - Updatenews360
Quick Share

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ சுமார் ஆறு நகரங்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிசிசிஐ முன்பே தெரிவித்திருந்தது. இதற்கிடையில் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடரும் நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முழுமையாக நடத்த சுமார் ஆறு நகரங்களில் மட்டும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி மற்றும் பெங்களூரு என ஆறு நகரங்களில் மட்டும் இந்த தொடர் இந்தாண்டு முழுவதுமாக நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் மும்பை நகரில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிகிறது. மற்ற நகரங்களில் சுமார் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. வைரஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் பரவி வருவதால் மும்பை நகரில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் இந்தியா, இங்கிலாந்து அணியில் தற்போது பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருநாள் தொடருக்கான போட்டிகள் அனைத்தும் புனே நகரில் நடக்க உள்ளன. இதற்கிடையில் ஆறு நகரங்களின் முடிவு குறித்துப் பங்கேற்கும் எட்டு அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ இதுவரை தெளிவுபடுத்தவில்லை. மேலும் 6 நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் பிசிசிஐ எப்படிப் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று நகரங்களான அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா மட்டுமே நடத்தப்பட்டது. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது பிசிசிஐ. இந்நிலையில் இந்தியாவில் 6 நகரங்களில் இந்த தொடர் நடத்தப்படுவது சிறந்த யோசனையாகவே பலரும் கருதுகின்றனர்.

Views: - 1

0

0