மஞ்சளா? நீலமா? இன்னும் சற்று நேரத்தில் துபாயில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 6:39 pm
IPL -Updatenews360
Quick Share

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்ட்ட 14வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மீண்டும் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இன்று பிரமாண்டமாக தொடங்கும் ஐபிஎல் தொடர் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டிஅய சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இடையேதான்.

சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை காண எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதனில் சற்றும் குறைவு இல்லாமல் ஐபிஎல்லில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீசன் மற்றும் நடப்பாண்டு முதல் பாதியில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் அணி வீரர்களுக்கும், ஐபிஎல் பிரமாண்டத்திற்கும் சற்று குறைவு இருந்த நிலையில், அமீரகத்தில் இன்று தொடங்கும் போட்டியில் அதற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 328

0

0